தமிழில் இணைய வரைபடம் – Tamil Web Maps

இணையசார் வரைபடங்கள் (Online Maps) நம் வாழ்வில் இன்று இன்றியமையானவையாகிவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இத்தொழில்நுட்பம் இருப்பினும், தமிழ் / ஏனைய இந்திய மொழிகளில் இவை வருவதற்கு பல தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்து வந்தன. ஓராண்டிற்கு முன்னர் கூகிள் நிறுவனம் இந்தி மொழியில் வரைபடங்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கியது. ஆயினும் தமிழுக்கு இன்னும் நேரம் அமையவில்லை. 7-8 ஆண்டுகள் (தோராயமாக 2008-09) முன்னர் யாகூ நிறுவனம் இந்திய மொழிகளில் இணைய வரைபடம் திட்டத்தை நடத்தி வந்தது. அப்பொழுது ஆங்கில பெயர்களை ஒலிபெயர்த்து தமிழில் பீட்டா பதிப்புகளை வெளியிட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் இணைய பெரு நிறுவனங்களுக்கு வரைபடங்களை தம்மொழியாக்கும் முயற்சிகளில் பெரும் ஆர்வம் இல்லை.

‘வரைபடங்களின் விக்கிப்பீடியா’ என அழைக்கப்படும் ஓபன்ஸ்ட்ரீட்மேப்ஸ் திட்டத்தில்(OSM) வரைபடங்களிலுள்ள தகவல்களை (பெயர்களை) மொழிபெயர்க்கும் வசதி பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் அவற்றைக்கொண்டு வரைபடங்கள் அமைப்பதில் சிக்கல்கள் இருந்து வந்தன. [ஓர் இணைய வரைபடம் மென்பொருளானது, உலகம் முழுவதற்கும் 1 – 20 உருவளவுகளுக்கு (zoom level) தனித்தனி சிறு படங்களை(tiles) உருவாக்கி, அதனை ஒன்று சேர்த்து தைத்தால் தான், நமக்கு சீராக இணைய வரைபடம் வழங்க முடியும்]. தமிழில் ‘ஃபோட்டோஷாப்’, கணினிசார் வரைகலை மென்பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு இவ்வாறு நிரல் சார்ந்து எழுத்துக்களை வரைபடமாக மாற்றுவதிலுள்ள பிரச்சனைகளை சந்தித்திருப்பினர். வரைபடங்களை உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்களிலும் இம்மாதரியான சிக்கல்கள் இருந்து வந்தன.

அண்மையில் தொழில்நுட்ப உலகில் வரைபடம்-சார்ந்த தொழில்நுட்பப் புரட்சியின் (ஊபர் பின்) பிறகு வரைபடம் சார்ந்த சிறு துளிர் நிறுவனங்கள் வரத்தொடங்கின. வரைபட கட்டற்ற மென்பொருட்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் இந்நிறுவனங்களால் தம்மொழியாக்க வரைபடங்கள் மீது கவனம் கூடியது.

தமிழில் உலக வரைபடம்
தமிழில் உலக வரைபடம்

கடந்த ஆண்டு பெங்களூரில் Mapbox நிறுவனம் நடத்திய கூட்டத்தில் கன்னட வரைபடங்களுக்கான முன்மாதிரி வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டது. அண்மையில் தேஜெஷ் இந்திய மொழிகளில் வரைபடங்கள் குறித்த பதிவினை பகர்ந்தார். இதனை தொடந்து தமிழுக்கு Mapbox மூலம் இணைய வரைபடம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது, Mapzen எனும் நிறுவனத்தின் சேவைகளின் மூலம் மிக எளிதில், விரைவில் தமிழ் வரைபடம் உருவாக்க முடியும் என அறிந்தோம். எனக்கு இப்பதிவினை எழுதுவதற்க்கு ஆகும் நேரத்தில் ஒரு பகுதி நேரத்தில் கண்டறிந்தது தான் இணையசார் தமிழ் வரைபடம்

இதனை அமைக்க உதவிய Mapbox, Mapzen நிறுவனத்தினருக்கும், எண்ணற்ற வரைபடம்-சார் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் கோடி நன்றிகள்.

பிகு : அடுத்த முறை ஊபர் / ஓலா ஓட்டுனர் வரைபடம் தமிழில் இல்லை, எனக்கு ஆங்கிலம் வராது எனக்கூறி வேதனைப்பட்டால், இந்த சுட்டியை அவருக்கு காண்பியுங்கள்.

அடுத்த கட்டம் :

 • Translate Map data
 • Custom styles
 • City focus
 • Tamil map search

Comments 6

 • அண்ணா சாலை – ‘அன்ன சாலை’ என்று வருகிறது. ஆனால் சுவாமி சிவானந்தா சாலை, பல்லவன் சாலை போன்றவை சரியாக உள்ளன. எப்படி?

  • சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும். OSM தரவுதளத்தில் எழுத்துப்பிழை. இவ்வளவு நாட்கள் தமிழ் மொழிபெயர்ப்பை உள்ளீடு மட்டும் செய்து செல்வோர் பங்களிப்பாளர்கள். அதனை வரைபடத்தில் பார்க்கும் வசதி இல்லை. இப்பொழுது தான் அது சாத்தியமானது. தமிழ் மொழிபெயர்ப்புகளை சரிபார்க்க வேண்டும், மொழிபெயர்ப்பு % ஐ பெருக்க வேண்டும்.

   • How to add translation to other places and verify the translation?

    • Register in http://www.openstreetmap.org. While browsing the map in mapzen, hover and click the node that is unnamed / with incorrect translation, click the option, ‘Edit with ID’. Provide a correct translation and save.

     I am also looking at extracting all names into a sheet for verifying and translating, shall ping you offline, once I have something.

 • இணையசார் தமிழ் வரைபடம் ஆப் உள்ளதா?

  • இப்பொழுது இல்லை. விரைவில் வரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: